பெண்களுக்கு மொபைல் வேண்டாம்: மகளிர் ஆணைய உறுப்பினரால் சர்ச்சை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
லக்னோ:''பாலியல் கொடுமைகளை தடுக்க, பெற்றோர் தங்கள் மகள்களுக்கு மொபைல் போன் வாங்கி தரக் கூடாது,'' என, உ.பி., மகளிர் ஆணைய உறுப்பினர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அலிகார் மாவட்டத்தில் குறை தீர்ப்பு முகாமில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மீனா குமாரி பேசியதாவது:பெண்களிடம் மொபைல்போன்

லக்னோ:''பாலியல் கொடுமைகளை தடுக்க, பெற்றோர் தங்கள் மகள்களுக்கு மொபைல் போன் வாங்கி தரக் கூடாது,'' என, உ.பி., மகளிர் ஆணைய உறுப்பினர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அலிகார் மாவட்டத்தில் குறை தீர்ப்பு முகாமில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மீனா குமாரி பேசியதாவது:பெண்களிடம் மொபைல்போன் தரக் கூடாது. அவர்கள் ஆண்களிடம் மணிக்கணக்கில்பேசுகின்றனர். பின், வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

குடும்பத்தினர் யாரும், தங்கள் பெண்களின் மொபைல் போனை ஆராய்ந்து பார்ப்பதில்லை. பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்க இந்த சமூகமும் காரணம். தங்கள் மகள்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, தாய்மார்களுக்கு உள்ளது. பல பெண்கள் பொறுப்பற்று உள்ளதற்கு, அவர்களின் தாய்மார்கள் தான் காரணம்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இவரது பேச்சு உ.பி.,யில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.''பாலியல் வன்கொடுமைக்கு, பெண்களிடம் மொபைல் போன் உள்ளது தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, உ.பி., மகளிர் ஆணைய துணை தலைவர் அஞ்சு சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X