பதிவு தேவையா?

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பதிவு தேவையா? தடுப்பூசி போடுவதற்கு இணையதளப் பதிவு தேவையற்றது. இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும், உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இணையதளப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது. தடுப்பூசி மையங்களுக்கு வரும் அனைவருக்கும் ஊசி போட வேண்டும்.ராகுல் எம்.பி., காங்கிரஸ்சந்தேகமே இல்லை!மக்களிடம், பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து வருகிறதா

பதிவு தேவையா?

தடுப்பூசி போடுவதற்கு இணையதளப் பதிவு தேவையற்றது. இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும், உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இணையதளப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது. தடுப்பூசி மையங்களுக்கு வரும் அனைவருக்கும் ஊசி போட வேண்டும்.
ராகுல்

எம்.பி., காங்கிரஸ்

சந்தேகமே இல்லை!

மக்களிடம், பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து வருகிறதா என்பது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. கடந்த ஏழு ஆண்டுகளாக, தாங்கள் பெற்ற வெற்றிகளுக்கு மோடி தான் காரணம் என, பா.ஜ.,வினர் நம்புகின்றனர். தற்போது மோடி தான், நாட்டுக்கும், பா.ஜ.,வுக்கும் மிகப் பெரிய தலைவராக உள்ளார். இதில் சந்தேகம் இல்லை

சஞ்சய் ராவத்

மூத்த தலைவர், சிவசேனா

பேரம் நடத்தவில்லை!

பா.ஜ.,வில் சேர்வதற்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் நட்டா ஆகியோரிடம், எந்த பேரமும் நடத்தவில்லை. காங்கிரசில் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை நிலவுவதால் தான், பா.ஜ.,வில் சேர்ந்தேன். எனக்கு ராகுல் உட்பட, காங்கிரஸ் தலைவர்கள் யாருடனும், எந்த பிரச்னையும் இல்லை.

ஜிதின் பிரசாதா

முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X