இறப்பு எண்ணிக்கையில் முரண்பாடு பீஹாரில் நிகழ்ந்த கடும் குளறுபடி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பாட்னா:கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக, இதுவரை வெளியிடப்பட்ட எண்ணிக்கையை பீஹார் அரசு மறு ஆய்வு செய்ததை அடுத்து, அவை, 73 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள புக்சார் மாவட்டத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்பட்ட
 இறப்பு எண்ணிக்கையில் முரண்பாடு பீஹாரில் நிகழ்ந்த கடும் குளறுபடி

பாட்னா:கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக, இதுவரை வெளியிடப்பட்ட எண்ணிக்கையை பீஹார் அரசு மறு ஆய்வு செய்ததை அடுத்து, அவை, 73 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள புக்சார் மாவட்டத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்பட்ட எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக, பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தெரிவித்தது.இதையடுத்து கொரோனா மரணங்கள்குறித்து தணிக்கை செய்ய, மாநில அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான பணிகள், 20 நாட்களாக நடந்தன.

தணிக்கை முடிந்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது. அதில், கொரோனாவால் பீஹாரில் இதுவரை, 9,429 பேர் பலியாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தணிக்கைக்கு முன்னதாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 5,500 ஆக இருந்தது. மறு ஆய்வுக்கு பின், 3,951 மரணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. கொரோனா மரணங்கள், முன்பு கூறப்பட்டதை விட, 73 சதவீதம் அதிகமாக இருப்பது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

அதேபோல, 7 லட்சத்து, 1,234 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்பட்ட எண்ணிக்கை, 6 லட்சத்து, 98 ஆயிரத்து, 397 ஆக குறைக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, பீஹார் அரசு நேற்று முன் தினம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X