கோல்கட்டா: திருமணம் ஆனதாக திரிணாமுல் காங். எம்.பி.யும். நடிகையுமான நஸ்ரத் ஜஹான் பார்லிமென்ட்டில் பொய் கூறினாரா என பா.ஜ.வை சேர்ந்த அமித் மால்வியா கேள்வியேழுப்பியுள்ளார்.
மேற்குவங்க திரிணாமுல் காங். லோக்சபா எம்.பி.யும். நடிகையுமான நஸ்ரத் ஜஹான், 31 தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நிகில் ஜெயினை துருக்கி நாட்டின் சட்டப்படி திருமணம் செய்தேன்.
அது இந்திய சட்டப்படி செல்லாது. அதனால் நிகிலுடனான என் திருமணம் சட்டப்படியானதல்ல. இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தோம். எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண பதிவு சட்டத்தின் பதிவு செய்தால் மட்டுமே திருமணம் சட்டப்படியாக செல்லும். ஆனால் பதிவு செய்யவில்லை எனவே நிகிலுடனான திருமணம் செல்லாது என்றார்.
இது குறித்து பா.ஜ.வைச் சேர்ந்த அமித்மால்வியா கூறியது, அவர் நடிகையாக மட்டும் இருந்தால் அவரது திருமண விவகாரம் தனிப்பட்ட விஷயம் என யாரும் கவலைப்பட போவதில்லை. ஆனால் ஒரு கட்சியின் எம்.பி.யாக உள்ளார். தனக்கு திருமணம் ஆனதாக பார்லிமென்டில் கூறியுள்ளார்.
இப்போது திருமணம் செல்லாது என கூறுகிறார்.அப்படியானால் பார்லிமென்ட்டில் பொய் கூறியனார ? . இவ்வாறு அமித்மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE