அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொண்டர்கள் வர வேண்டாம்:பன்னீர்செல்வம்., பழனிசாமி., அறிக்கை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் ஒப்புதலுடன், கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், வரும் 14ம் தேதி பகல் 12:00 மணிக்கு நடக்க உள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ., ஆகியோர்

சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் ஒப்புதலுடன், கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:

அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், வரும் 14ம் தேதி பகல் 12:00 மணிக்கு நடக்க உள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ., ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர்.


முக கவசம்

கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப் பிடித்தும், முககவசம் அணிந்தும், அடையாள அட்டையுடன், தவறாமல் பங்கேற்க வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மட்டுமே நடக்க இருப்பதால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, அன்று கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தலைமை அலுவலகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.கட்சி தலைமை அலுவலகத்திற்குள், எம்.எல்.ஏ.,க்கள் தவிர, வேறு யாரையும் அனுமதிக்க இயலாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X