அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா மேம்பாட்டுக்கு குழு அமைக்க உத்தரவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:சுற்றுலா மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் வழங்க, வல்லுனர் குழு அமைக்கும் படி, சுற்றுலாத்துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் மதிவேந்தன் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆய்வு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை வகித்தார். துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.மாமல்லபுரத்தில், உலகத்தரம் வாய்ந்த
 சுற்றுலா மேம்பாட்டுக்கு குழு அமைக்க உத்தரவு

சென்னை:சுற்றுலா மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் வழங்க, வல்லுனர் குழு அமைக்கும் படி, சுற்றுலாத்துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் மதிவேந்தன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆய்வு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை வகித்தார். துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.மாமல்லபுரத்தில், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 441 கோடி ரூபாய். ராமேஸ்வரம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளை, சுற்றுலா கண்ணோட்டத்தில் மேம்படுத்த, 40 கோடி ரூபாய் மதிப்பில், முதல் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:கொரோனா தொற்று காரணமாக, 18 மாதங்களாக, உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணியர் வருகை, பெருமளவு குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாவை வாழ்வாதாரமாக வைத்து, தொழில் செய்தவர்கள் வருவாய் இழந்துள்ளனர்.

வரும் காலங்களில், அனைத்து சுற்றுலா தலங்களிலும், சுற்றுலா பயணியர் நலன் கருதி, நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காகவும், சுற்றுலாவை நம்பி தொழில் செய்வோர், வருவாயை அதிகரிக்கவும் ஆலோ சனை வழங்க, வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள,திருவள்ளுவர் சிலை அழகை, இரவிலும் சுற்றுலா பயணியர் கண்டுகளிக்கும் வகையில், சீரொலி சீர்மிகு காட்சி அமைக்க, திட்ட அறிக்கை தயார் செய்யுங்கள்.பூம்புகாரில் அமைந்து உள்ள, சுற்றுலா வளாகத்திற்கு, சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்க, கலைக்கூடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, திட்ட அறிக்கை தயார் செய்யுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X