அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்புமுனை தீர்ப்பை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்: முருகன்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:'கோவில்கள், புராதன சின்னங்களை பாதுகாக்க, உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளதை, பா.ஜ., பெரிதும் வரவேற்கிறது; திருப்புமுனை தீர்ப்பை, அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை உயர் நீதிமன்றம், கோவில்கள் மற்றும் புராதன சின்னங்களை பாதுகாக்க, அதிரடி உத்தரவுகளை வழங்கி உள்ளதை, பா.ஜ., பெரிதும்

சென்னை:'கோவில்கள், புராதன சின்னங்களை பாதுகாக்க, உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளதை, பா.ஜ., பெரிதும் வரவேற்கிறது; திருப்புமுனை தீர்ப்பை, அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:சென்னை உயர் நீதிமன்றம், கோவில்கள் மற்றும் புராதன சின்னங்களை பாதுகாக்க, அதிரடி உத்தரவுகளை வழங்கி உள்ளதை, பா.ஜ., பெரிதும் வரவேற்கிறது.நினைவு சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க, மாமல்லபுரம் உலக புராதன பகுதி மேலாண்மை ஆணையத்தை, எட்டு வாரங்களில் அமைக்க வேண்டும்.

17 பேர் கொண்ட குழுவில், மத்திய - மாநில தொல்லியல் துறை பிரதிநிதிகள். வரலாற்று அறிஞர்கள், தகுதியான ஸ்பதி, ஆகம சில்ப சாஸ்திர நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும் என, வழிகாட்டி உள்ளது.குழுவின் ஒப்புதல் இல்லாமல், மத்திய - மாநில சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், கோவில்கள், சிலைகள், சிற்பங்கள் மற்றும் சுவர் சித்திரங்களில் எந்த மாற்றமும், சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டு உள்ளது.

அதன்படி பார்த்தால், நினைவு சின்னங்களுக்கான எந்த பணிகளுக்கும், முறைகேட்டிற்கும், இந்த குழுவே பொறுப்பு என்றாகிறது. கோவில் நிலங்களை பொறுத்தவரை, பொது நோக்கம் என்ற அம்சத்தை எடுத்து வரக்கூடாது என, தெளிவாக அறிவுறுத்தியதன் காரணமாக, கோவில் நிலங்களை சூறையாடுவது தவிர்க்கப்படும்.குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை, ஆறு வாரங்களில் தயாரித்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

அவர்களை வெளியேற்றவும், பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட, கோவில் ஊழியர்களுக்கான ஊதியத்தை, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயிக்க வேண்டும். அது, அரசு ஊழியருக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது, இதுநாள் வரை கவனிக்கப்படாத அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.இந்த திருப்புமுனை தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்தையும், அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X