சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நோய் தொற்று இல்லா தமிழகம் உருவாகும்: தொண்டர்களுக்கு கடிதம்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (9+ 44)
Share
Advertisement
சென்னை:'நோய் தொற்று இல்லாத தமிழகம் உருவாகும்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதம்:கட்சி எல்லைகளை கடந்து, அரசு பாராட்டுகளை பெற்றுள்ளது. பல்வேறு துறையினரும் ஆதரவு அளிக்கின்றனர். பொதுமக்கள் தங்களின் நம்பிக்கை வீண்போக வில்லை என, நிம்மதி அடைந்துஉள்ளனர்.அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அனைத்து மக்களுக்குமான இந்த அரசு,
தொற்று இல்லா தமிழகம்,தி.மு.க., தொண்டர்கள் , கடிதம்

சென்னை:'நோய் தொற்று இல்லாத தமிழகம் உருவாகும்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:கட்சி எல்லைகளை கடந்து, அரசு பாராட்டுகளை பெற்றுள்ளது. பல்வேறு துறையினரும் ஆதரவு அளிக்கின்றனர். பொதுமக்கள் தங்களின் நம்பிக்கை வீண்போக வில்லை என, நிம்மதி அடைந்துஉள்ளனர்.அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அனைத்து மக்களுக்குமான இந்த அரசு, தன் பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டு வருகிறது.


சிறப்பாக அமையும்

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில், காவிரி பாசன பகுதிகளில் நடைபெறும் துார் வாரும் பணிகளை பார்வையிட உள்ளேன்.இந்தப் பணிகள் கடைமடை வரை, செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து, ஜூன் 12-ல், சேலம் மாவட்டத்தில் ஆய்வு பணிகள்,- ஆலோசனை கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளில் பங்கேற்கிறேன்.மேட்டூர் அணையில் இருந்து, காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன்.

லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில், குறுவை சாகுபடி சிறப்பாக அமையும்; உழவர்களின் வாழ்வாதாரம் மலரும்.கட்சியினர், என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்; வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம்.கட்டுப்பாடுதொற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதால், நீங்களும், நானும் ஊரடங்கு கால நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். 'கடமை'யை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால்,- 'கண்ணிய'மிக்க செயல்பாடு என்பது, நீங்கள் 'கட்டுப்பாடு' காப்பது தான்.

பேரிடர் காலத்தால், நாம் கட்டுண்டு இருக்கிறோம். பொறுத்திருப்போம்; காலம் விரைவில் மாறும்; நோய்த் தொற்று இல்லாத தமிழகம் உருவாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


விபத்தில் மூவர் பலி: நிவாரணம் தர உத்தரவு

கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, ஜெயலட்சுமி, 23, என்பவரை பிரசவத்திற்காக, நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்.அவருடன், அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோரும் சென்றனர். அந்த ஆம்புலன்ஸ் விபத்துக்கு உள்ளானதில், செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜெயலட்சுமி இறந்தார்.

இதையறிந்த முதல்வர், தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துஉள்ளார். அத்துடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, இறந்த கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமி குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய்; மற்ற இருவர் குடும்பத்திற்கு, தலா, 3 லட்சம் ரூபாய், நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9+ 44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-ஜூன்-202114:45:53 IST Report Abuse
meenakshisundaram ட்ராமா .செட்டிங்ஸ் மூலமே ஆட்சிக்கு வந்து விட்டு இன்னும் விளம்பரம் செய்வது சரியா? அது சரி ,பிரசாந்த் கோஷோரிடம் முதலீடு செய்த முன்னூத்தி ஐம்பது கோடியை எப்போது மீட்பது ?எவ்வாறு மீட்பது ?இது கட்சி பணமா இல்லே தனியார் முதலீடா?
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூன்-202119:26:43 IST Report Abuse
oce யோகி மோடிஜியையும் அமித்ஷாவையம் அரசியல் ரீதியாக சந்திக்கலாம்.அது தான் முறை. காவிரி அணை திறப்பை அதன் நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் திறக்கலாம். காக்கா கத்தினால் கூட அது தன்னை பார்த்து புகழ்வதாக சொல்லி தம்பட்டம் அடிப்பது விளம்பரத்துக்கா.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூன்-202119:16:01 IST Report Abuse
oce காவிரி தொற்று பரவாதுன்னு எவண் சொன்னான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X