சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'ஆன்லைன்' பாடத்தில் ஆபத்து!

Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'ஆன்லைன்' கல்வி அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார், லண்டனை சேர்ந்த வித்யா சுரேஷ்: பிரிட்டனில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது, ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொல்வர். அதில், பள்ளி இணையதளம் உட்பட பொதுவெளியில், குழந்தைகள் புகைப்படத்தை வெளியிடலாமா, வேண்டாமா என, அனுமதி கேட்டிருப்பர். நம் விருப்பத்தை
சொல்கிறார்கள்

'ஆன்லைன்' கல்வி அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார், லண்டனை சேர்ந்த வித்யா சுரேஷ்: பிரிட்டனில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது, ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொல்வர். அதில், பள்ளி இணையதளம் உட்பட பொதுவெளியில், குழந்தைகள் புகைப்படத்தை வெளியிடலாமா, வேண்டாமா என, அனுமதி கேட்டிருப்பர். நம் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். வேண்டாம் என்று நாம் சொல்லி விட்டால், நாம் எழுத்து மூலமாக விருப்பம் தெரிவிக்கும் வரை, நம் குழந்தை இருக்கும் எந்தவொரு புகைப்படமும், எங்கும் வெளியே வராது. மீறி தவறுதலாக எங்காவது வந்து விடும் புகைப்படத்தை வைத்து, பள்ளியின் மீது பெற்றோர் புகார் பதிவு செய்ய முடியும்.காரணம், இணைய உலகில் இருக்கும் ஆபத்துகள். ஒருமுறை இணையத்தில் நாம் பதிவேற்றம் செய்யும் படத்தை, உலகில் யார் வேண்டுமானாலும், அனுமதியின்றி தரவிறக்கம் செய்ய முடியும்.இதை அறியாமல், குழந்தைகளின் படங்களை, நாம் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறோம்; இதில் பல ஆபத்துகள் உள்ளன.

செக்ஸ் குற்றங்களுக்கு, குழந்தைகளை ஆட்படுத்தும் குற்றவாளிகள் நிறைய பேர் உள்ளனர். எனவே, இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும்.தமிழகத்தில் இப்போது, பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில், ஆசிரியர், மாணவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியும். ஆனால், இங்கிலாந்தில், ஆன்லைன் வகுப்புகள் என்றாலும், குழந்தையை ஆசிரியரோ, ஆசிரியரை குழந்தைகளோ பார்க்க முடியாது; குரல் மட்டும் தான் கேட்கும். இதனால், குழந்தைகள் படத்தை தவறாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதுபோல, வீட்டில் இருந்து பாடம் நடத்தினாலும், பள்ளிக்கு வருவது போன்ற உடையில் தான், ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும்.எக்காரணம் கொண்டும், எந்த ஆசிரி யரின் தொலைபேசி எண்ணோ, எந்த குழந்தையின் தாய், தந்தையின் தொலைபேசி எண்ணோ பகிர்வது முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளது.நம் மாநிலத்திலும் இதுபோல் செய்தால், தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆன்லைன் என்ற எண்ணத்தில், 'வாட்ஸ் ஆப்' செயலி மூலம் உரையாடுவதும் தடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கும், 'செல்பி' எடுப்பதன் ஆபத்து, ஆன்லைனில் எப்படி முகம் காட்டாமல் பேச வேண்டும்;

என்னென்ன கேள்விகள் மட்டும் கேட்க வேண்டும் என்பன போன்றவற்றை கற்றுத்தர வேண்டும். குழந்தைகளை திடீர் வெள்ளத்தில் நீந்த விட்டிருக்கிறோம். நீச்சல் கற்றுக் கொடுக்கும் அவகாசமில்லை என்றாலும், பாதுகாப்பிற்கென ஒரு துடுப்பாவது கையில் கொடுப்பது அவசியமல்லவா!

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kishore Kumar Chari - chennai,இந்தியா
12-ஜூன்-202106:14:08 IST Report Abuse
Kishore Kumar Chari Very good advises for all . Why not all the institutions follow this immediately. Is government come forwarded and implement immediately so that abusing sex will be stopped and let every one wear school uniform and also teachers
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
11-ஜூன்-202113:31:01 IST Report Abuse
karutthu அருமையான கட்டுரை ......இதை மத்திய , மாநில கடைபிடித்தால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X