தடுப்பூசி தகவல் தெரிவிக்க மாநிலங்களுக்கு கட்டுப்பாடா?

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : தடுப்பூசிகள் இருப்பு, எந்த தட்பவெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை தெரிவிக்க, மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தொடர்பான விபரங்கள், 'இவின்' எனப்படும் மின்னணு தடுப்பூசி தகவல் தொகுப்பு தளத்தில்
தடுப்பூசி ,தகவல், மாநிலங்கள், கட்டுப்பாடா?

புதுடில்லி : தடுப்பூசிகள் இருப்பு, எந்த தட்பவெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை தெரிவிக்க, மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தொடர்பான விபரங்கள், 'இவின்' எனப்படும் மின்னணு தடுப்பூசி தகவல் தொகுப்பு தளத்தில் சேகரிக்கப்படுகின்றன. இது, மத்திய - மாநில அரசுகள் இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.இந்நிலையில், 'மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் இந்த தகவல்களை யாருடனும் பகிரக் கூடாது' என, மாநிலங்களை சேர்ந்த தேசிய சுகாதார இயக்க இயக்குனர்களுக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து மாநில அரசுகளுக்கு வாய்ப்பூட்டு போடப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:தடுப்பூசி தொடர்பான விபரங்கள், 'கோவின்' என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம், வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதை தவிர, தடுப்பூசி தொடர்பாக தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில், இவின் என்ற தளத்தின் வாயிலாக, தடுப்பூசிகள் குறித்த முக்கியமான தகவல்கள் பகிரப்படுகின்றன.

இந்த தகவல்களை மற்றவர்களுக்கு வெளியிட்டால், அது சந்தை போட்டி மற்றும் குழப்பம் உள்ளிட்டவை உருவாக வாய்ப்புள்ளது. தடுப்பூசி தொடர்பாக திட்டமிடுவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த தளம்.கொரோனாவுக்கான தடுப்பூசி மட்டுமல்ல, மற்ற தடுப்பூசிகள் தொடர்பாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக, இந்த தளத்தின் மூலம் தகவல் பகிரப்படுகிறது. இந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே, மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும், அனைத்து வழிகளிலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
11-ஜூன்-202114:01:09 IST Report Abuse
Sridhar மத்திய அதாவது 'ஒன்றிய' அரசுக்கு திருடர்களிடம் எப்படி தெளிவாக சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
11-ஜூன்-202109:49:16 IST Report Abuse
blocked user இதைவிட முக்கியம் இவன்கள் சொல்லும் பொய்களை நிறுத்த வேண்டும். கள்ளத்தனமாக தனியாருக்கு தாரை வார்த்து காசடிக்கும் இவன்களை டிஸ்மிஸ் செய்தால்க்கூட தப்பில்லை.
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
11-ஜூன்-202123:21:25 IST Report Abuse
Naam thamilarபிஞ்சிடும் அம்பி...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-ஜூன்-202108:38:23 IST Report Abuse
duruvasar இந்தியாவில் ஊடக தர்மங்கள் உச்சத்தில் இருக்கிறது. பட்டுக்கோட்டையார் பாடலை அவ்வப்போது நினைவில் கொள்வதை தவிர, யாரும் எதுவும் செய்யமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X