அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு சிவப்பு கம்பளம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:'ஊரடங்கை தமிழக அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தாததும், மக்கள் கடைப்பிடிக்காததும், கொரோனாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் செயல்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் விதம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த விமர்சனம், தமிழக மக்கள் மீதான

சென்னை:'ஊரடங்கை தமிழக அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தாததும், மக்கள் கடைப்பிடிக்காததும், கொரோனாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் செயல்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் விதம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த விமர்சனம், தமிழக மக்கள் மீதான அக்கறை காரணமாக வெளியிடப்பட்ட பொறுப்பான கருத்துகள்; அவை வரவேற்கத்தக்கவை.கொரோனா தொற்றின் ஆபத்தில் இருந்து, தமிழகம் இன்னும் விடுபடவில்லை.

இது, கொண்டாட்டத்திற்கான நேரமும் அல்ல. தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை, 500க்கும் கீழ் குறைந்தாலும், அபாய கட்டத்தை கடந்து விட்டதாக அர்த்தமல்ல. தமிழக மக்களில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட்ட பிறகே, கொரோனா ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகலாம். அதுவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இல்லாவிட்டாலும், பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

ஊரடங்கை, தமிழக அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தாததும், மக்கள் கடைப்பிடிக்காததும் கொரோனாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் செயல். எனவே, தமிழக மக்களின் நலன் கருதி, ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X