அரசியல் செய்தி

தமிழ்நாடு

ம.நீ.ம., நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:பாலியல் விவகாரத்தில் சிக்கிய ஆசிரியருக்கு எதிராக செயல்பட்டதற்காக, ம.நீ.ம., துணை செயலரும் வழக்கறிஞருமான ஸ்ரீதருக்கு, வி.சி., கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் அறிக்கை:'சென்னை, செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பயின்ற மாணவியரிடம், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட புகாரில்,

சென்னை:பாலியல் விவகாரத்தில் சிக்கிய ஆசிரியருக்கு எதிராக செயல்பட்டதற்காக, ம.நீ.ம., துணை செயலரும் வழக்கறிஞருமான ஸ்ரீதருக்கு, வி.சி., கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் அறிக்கை:'சென்னை, செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பயின்ற மாணவியரிடம், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட புகாரில், உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ம.நீ.ம., வழக்கறிஞர் அணி மாநில துணை செயலர் ஸ்ரீதர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

கடந்த 7ம் தேதி அவ்வழக்கு தொடர்பாக, குழந்தைகள் நல ஆணையத்தில் ஆஜராகி, தகுந்த ஆதாரங்களோடு சாட்சியமும் அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தை கட்சி தொண்டரணியை சேர்ந்த தமிழ்கதிர், தொலைபேசியில் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துஉள்ளார்.ஸ்ரீதரிடம் அவர், 'இனிமேல் இவ்வழக்கு தொடர்பாக, நீங்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. 'மாணவியர் யாரும் சாட்சி தர முன்வர மாட்டார்கள்' எனக்கூறி, தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் விவகாரத்தில் பொங்கிய, வி.சி., கட்சியினர், தற்போது, செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரி யர் விவகாரத்தில், கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். இதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அதிகாரப்பூர்வம் அல்ல!

ம.நீ.ம., நிர்வாகிக்கு, வி.சி., தொண்டரணியை சேர்ந்தவர் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், கமல் கட்சி தொழிலாளர் நல அணியை சேர்ந்த, மாநில செயலர், அறிக்கை வெளியிட்டார். மாலையில், 'அந்த அறிக்கை, கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை இல்லை' என, ம.நீ.ம., செய்தி தொடர்பாளர் முரளிஅப்பாஸ் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X