அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தனியார் பார்களை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்'

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:'வருவாயை பெருக்க, தனியார் 'பார்'களை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசின் வருவாயை பெருக்க, தமிழகம் முழுதும், தனியார் பார்களை அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வருவாயை மட்டும் நோக்கமாக

சென்னை:'வருவாயை பெருக்க, தனியார் 'பார்'களை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக அரசின் வருவாயை பெருக்க, தமிழகம் முழுதும், தனியார் பார்களை அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வருவாயை மட்டும் நோக்கமாக கொண்டு, மக்கள் நலனுக்கு எதிராக, அரசு செயல்பட முனைவது கண்டிக்கத்தக்கது.

மது வணிகத்தின் வாயிலாக கிடைக்கும் வருவாய், தொழு நோயாளியின் கைகளில் உள்ள வெண்ணெய்க்கு ஒப்பானது எனக் கூறி, தமிழகத்தில் மது விற்பனையை அனுமதிக்க முடியாது என, திட்டவட்டமாக அறிவித்தவர் அண்ணாதுரை. அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் ஆட்சியில், தனியார் பார்கள் அனுமதிக்கப்பட்டால், அதை அண்ணாதுரையின் ஆன்மா மன்னிக்காது. இதை உணர்ந்து, தமிழகத்தில் தனியார் பார்களை திறக்கும் திட்டத்தை தி.மு.க., அரசு கைவிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி, தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X