பிரதமரை சந்திக்க யோகி திட்டம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லி சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 'கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக
 பிரதமரை சந்திக்க யோகி திட்டம்

புதுடில்லி:டில்லி சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 'கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதையடுத்து, உ.பி., மாநிலத்துக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளர் ராதா மோகன் சிங், கட்சி யின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், முதல்வர் பதவியிலிருந்து ஆதித்யநாத் மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத், இரண்டு நாள் பயணமாக டில்லி வந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். பிரதமர் மோடியையும், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் இன்று சந்திக்க திட்டமிட்டு உள்ளார். 'மாநில அமைச்சரவையை மாற்றியமைப்பது பற்றி, அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்திய ஆதித்யநாத், பிரதமர் மோடி மற்றும் நட்டாவுடனும் இது குறித்து ஆலோசனை நடத்துவார்' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X