சுஷாந்த் பற்றிய திரைப்படம் தடை விதிக்க கோர்ட் மறுப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
புதுடில்லி:மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், 34, கடந்த ஆண்டு, மும்பையில் உள்ள வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் குறித்து,
 சுஷாந்த் பற்றிய திரைப்படம் தடை விதிக்க கோர்ட் மறுப்பு

புதுடில்லி:மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், 34, கடந்த ஆண்டு, மும்பையில் உள்ள வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, பல்வேறு பாலிவுட் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு திரைப்படமான, நியாய்: தி ஜஸ்டிஸ் என்ற ஹிந்தி திரைப்படம், இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை வெளியிடவும், தயாரிப்பில் உள்ள மற்ற திரைப்படங்களுக்கு தடை விதிக்கக் கோரியும், சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண கிஷோர் சிங், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:என் மகன் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, நியாய்: தி ஜஸ்டிஸ் என்ற படம் தயாரிக்கப் பட்டு உள்ளது. மேலும் சில படங்களும் தயாரிப்பில் உள்ளன.

என் மகனின் வாழ்க்கையை வியாபார நோக்கத்திற்காக திரைப்படமாக எடுக்கும் செயல், கருத்து சுதந்திரம் ஆகாது.எனவே, என் மகனின் வாழ்க்கை குறித்து நாடகம், சினிமா, புத்தகங்கள், பேட்டிகள், இதர படைப்புகள் வெளியிடுபவர்கள், என் மகன் மற்றும் என் குடும்பத்தின் கவுரவத்திற்கு பங்கம் விளைவிக்கின்றனர்.எனவே அவர்கள், 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நியாய்: தி ஜஸ்டிஸ் திரைபடத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்து, வழக்கை ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X