சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ரூ.1.19 கோடி கொள்ளைஹாஜிபூர்: பீஹாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள, ஜருவா பஜார் என்ற இடத்தில், தனியார் வங்கி கிளையில், துப்பாக்கியுடன் நால்வர் நுழைந்தனர். ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்து 1.19 கோடி ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். போலீசார் சிறப்புப் படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 'மாஜி' முதல்வர் மீது வழக்குபுதுடில்லி:

ரூ.1.19 கோடி கொள்ளை

ஹாஜிபூர்: பீஹாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள, ஜருவா பஜார் என்ற இடத்தில், தனியார் வங்கி கிளையில், துப்பாக்கியுடன் நால்வர் நுழைந்தனர். ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்து 1.19 கோடி ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். போலீசார் சிறப்புப் படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

'மாஜி' முதல்வர் மீது வழக்கு

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் நபம் துகி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், 2011 - 16ல் முதல்வராக பதவி வகித்தார். மேற்கு வங்க மாநிலம், சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள, மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயாவின் சுற்றுச்சுவர் கட்டுமான ஒப்பந்த பணி, அருணாச்சல பிரதேச பொதுப்பணித் துறையிடம் வழங்கப்பட்டது. அப்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பை வகித்து வந்த முதல்வர் நபம் துகி, அந்த கட்டுமான ஒப்பந்தத்தை, தனது உறவினருக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், முன்னாள் முதல்வர் நபம் துகி மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.

சீன குடிமகன் கைது

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் உள்ள, இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லை பகுதியில், எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, எல்லைப் பகுதியை கடந்து, மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்துக்குள் நுழைந்த நபரை, போலீசார் சோதனையிட்டனர். அவர் பெயர் ஜுன்வெய் ஹான் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து, சீன பாஸ்போர்ட், வங்கதேச விசா, மடிக்கணினி, மூன்று சிம் கார்டு கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

5 மகள்களுடன் பெண் தற்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில் உள்ள, பேம்சா கிராமத்தை சேர்ந்தவர், கேஜவ் ராம் சாஹு. கூலி தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி உமாவுக்கும், குடும்ப விவகாரம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 18 முதல், 10 வயது வரையிலான, ஐந்து பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். நள்ளிரவில் ஆறு பேரும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தியா எதிர்பார்ப்பு

புதுடில்லி: டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா பேசியதாவது:இந்தோ- - பசிபிக் வழிகாட்டுதல்களை வெளியிடும் இரண்டாவது ஐரோப்பிய நாடாக, ஜெர்மனி திகழ்ந்தது. அதை நாங்கள் வரவேற்கிறோம்.சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ - -பசிபிக் பிராந்தியத்தில், ஜெர்மனியுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X