சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறிமுதல்... லாரியில் மது பாட்டில்கள்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சூலுார்:கர்நாடக மாநிலத்தில் இருந்து, வெங்காய லோடு ஏற்றி வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சுல்தான்பேட்டை அடுத்த இடையர்பாளையம் ஊராட்சியில், தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு செல்லும் காட்டுப்பகுதியில், சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு லாரி நிற்பதாகவும், அதில், வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை
 பறிமுதல்... லாரியில் மது பாட்டில்கள்

சூலுார்:கர்நாடக மாநிலத்தில் இருந்து, வெங்காய லோடு ஏற்றி வந்த லாரியில் கடத்தி வரப்பட்ட, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சுல்தான்பேட்டை அடுத்த இடையர்பாளையம் ஊராட்சியில், தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு செல்லும் காட்டுப்பகுதியில், சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு லாரி நிற்பதாகவும், அதில், வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை விற்பதாகவும், சூலுார் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., ரவி தலைமையில் போலீஸ்காரர்கள் உதயகுமார், வெற்றிவேல், பாலமுருகன் அங்கு சென்று லாரியை சோதனையிட்டனர். வெங்காய மூட்டைகளுக்கு இடையில், பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். லாரி மற்றும் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள, 803 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அந்த லாரி, ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு சொந்தமானது என்பதும், சங்ககிரியை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் ஓட்டி வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X