பொது செய்தி

தமிழ்நாடு

மானியம்... தோட்டக்கலை துறையில், பணிகளுக்கு விடுவிப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
;தோட்டக்கலை துறையில், பயனாளிகளுக்கு மானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.தோட்டக்கலைத்துறை சார்பில், பண்ணைக்குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை கட்டுதல், மண்புழு படுக்கை அமைத்தல் உட்பட திட்டங்கள் அமலில் உள்ளன. அவற்றுக்கு அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. சூலுார் வட்டாரத்தில், நடப்பாண்டில் நடந்த பணிகளை, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி
 மானியம்... தோட்டக்கலை துறையில், பணிகளுக்கு விடுவிப்பு

;தோட்டக்கலை துறையில், பயனாளிகளுக்கு மானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.தோட்டக்கலைத்துறை சார்பில், பண்ணைக்குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை கட்டுதல், மண்புழு படுக்கை அமைத்தல் உட்பட திட்டங்கள் அமலில் உள்ளன. அவற்றுக்கு அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. சூலுார் வட்டாரத்தில், நடப்பாண்டில் நடந்த பணிகளை, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி ஆய்வு செய்து, பணிகளுக்கான மானியங்களை விடுவித்தார்.நீலம்பூரில் விவசாயி தங்கவேல் தோட்டத்தில், ரூ. 2 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறை, ஆனந்தன் தோட்டத்தில், ரூ. 50 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்ட மண்புழு படுக்கை, செம்மாண்டாம்பாளையம், கிட்டாம்பாளையம், காடுவெட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகளை ஆய்வு செய்தார். உதவி இயக்குனர்கள் மோகன், நந்தினி, துணை அலுவலர் சேகர் மற்றும் உதவி அலுவலர்கள் தியாகராஜன், சேட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.துணை இயக்குனர் ராஜேஸ்வரி கூறுகையில், ''பண்ணை குட்டை அமைக்க, ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. அதை முழுமையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டால், சாகுபடியில் இரு மடங்கு லாபம் ஈட்டலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X