பொது செய்தி

தமிழ்நாடு

மதிய உணவு வழங்கும் காமராஜர் தேசிய பேரவை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், காமராஜர் தேசிய பேரவை சார்பில், ஆதரவற்றோருக்கு மதியம் உணவு வழங்கி வருகின்றனர்.தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டும், பஸ்களும், வாகனங்களும் நிறுத்தப்பட்டதால், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆதரவற்றவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த காமராஜர் தேசிய

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், காமராஜர் தேசிய பேரவை சார்பில், ஆதரவற்றோருக்கு மதியம் உணவு வழங்கி வருகின்றனர்.தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டும், பஸ்களும், வாகனங்களும் நிறுத்தப்பட்டதால், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆதரவற்றவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த காமராஜர் தேசிய பேரவையும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து, மேட்டுப்பாளையம் நகரில் தினமும் மதியம், ஆதரவற்றவர்கள் 100 பேருக்கு, உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். மேலும் காமராஜர் தேசிய பேரவை அலுவலகத்தில், காலையிலிருந்து மாலை வரை, பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.இப்பணிகளில், ஜனதா தளம் மாவட்டத் தலைவர் வீரக்குமார், நண்பர்கள் ராஜன், சரவணன், கார்த்திக், பாலா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X