பொது செய்தி

தமிழ்நாடு

அழைப்பு... மானியத்தில் பாசனம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள், அரசு மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.சிறு, குறு விவசாயிகள் பயன்பெற, வேளாண் துறை சார்பில் பல்வேறு மானியங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100
 அழைப்பு... மானியத்தில் பாசனம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள், அரசு மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.சிறு, குறு விவசாயிகள் பயன்பெற, வேளாண் துறை சார்பில் பல்வேறு மானியங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம், பிற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும், சொட்டு நீர் பாசனம் அமைக்க வழங்கப்படுகிறது.இதற்காக நடப்பு நிதியாண்டில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு, 97 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தில், பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் மண் நீர் மாதிரிகள் ஆகியவற்றுடன், அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X