பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதுகாப்பு மற்றும் சிகிச்சை மையங்கள்...முடக்கம்!செயல்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
அன்னுார்:பள்ளிகளில் அமைக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு மையங்களும், சிகிச்சை மையங்களும் முடங்கியதால் தொற்று பாதித்தவர்கள் தவிக்கின்றனர். இதை செயல்பாடுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அன்னுார் தாலுகாவில், தினமும் சராசரியாக, 100 பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர். தொற்று பாதித்தவர்கள், காரமடை, மத்தம்பாளையம் மற்றும் கோவையில் உள்ள
கொரோனா பாதுகாப்பு மற்றும் சிகிச்சை மையங்கள்...முடக்கம்!செயல்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை

அன்னுார்:பள்ளிகளில் அமைக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு மையங்களும், சிகிச்சை மையங்களும் முடங்கியதால் தொற்று பாதித்தவர்கள் தவிக்கின்றனர். இதை செயல்பாடுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அன்னுார் தாலுகாவில், தினமும் சராசரியாக, 100 பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர். தொற்று பாதித்தவர்கள், காரமடை, மத்தம்பாளையம் மற்றும் கோவையில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனைக்கு காத்திருப்போர், பரிசோதனை முடிவுக்கு காத்திருப்போர் ஆகியோருக்கு என, அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, பொகலுார் மற்றும் ஒட்டர்பாளையத்தில், தலா 25 படுக்கைகள் கொண்ட பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது. மற்ற 19 ஊராட்சிகளிலும் பாதுகாப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது.இந்நிலையில், அல்லிகுளத்தில், தனியார் பள்ளியில் 150 படுக்கைகளுடனும், கோவில்பாளையம் அருகே அத்திப்பாளையம் தனியார் கல்லுாரியில், 250 படுக்கைகளுடனும் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இவை எதுவுமே இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களுக்கு போதுமான செவிலியர்கள் இல்லை என்பதால், அந்த மையங்களில், அறிகுறி உள்ளோரை தங்க வைக்க ஊராட்சி நிர்வாகங்கள் தயங்குகின்றன.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் ஒரு மையத்தில் கூட, அறிகுறி உள்ளோர் தங்க வைக்கப்படவில்லை. அல்லிகுளம் மற்றும் அத்திப்பாளையத்தில், கடந்த, 31ம் தேதி துவக்கப்பட்ட சிகிச்சை மையங்களுக்கும், டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கபடாததால் பத்து நாட்களாக அந்த சிகிச்சை மையங்களும் முடங்கிக் கிடக்கின்றன.இதனால், தொற்று பாதித்தவர்கள் வழக்கம்போல், காரமடை, மத்தம்பாளையம் அல்லது கோவைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். மேட்டுப்பாளையம், சூலுார், கோவை வடக்கு தாலுகாக்களில் கொரோனா சிகிச்சை மையங்களும், ஊராட்சிகள் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.ஆனால் அன்னுார் தாலுகாவில் ஒரு சிகிச்சை மையம் கூட இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. குறிப்பாக அன்னுார் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளில் ஒரு ஊராட்சியில் கூட பாதுகாப்பு மையம் செயல்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊராட்சி அளவிலான பாதுகாப்பு மையங்களை செயல்படுத்தவும், அல்லிகுளம் மற்றும் அத்திப்பாளையத்தில், அமைச்சரால் திறக்கப்பட்ட சிகிச்சை மையங்கள் செயல்பாட்டுக்கு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X