சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் கைது: 3 லாரிகள் பறிமுதல் :செம்மண் திருட்டில் போலீசார் அதிரடி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:சின்னதடாகம் அருகே செம்மண் திருட்டில் ஈடுபட்ட, 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக லாரி டிரைவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.சின்னதடாகம் வட்டாரத்தில், 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவை அரசின் விதிமுறைகளை மீறி, செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம்

பெ.நா.பாளையம்:சின்னதடாகம் அருகே செம்மண் திருட்டில் ஈடுபட்ட, 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக லாரி டிரைவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.சின்னதடாகம் வட்டாரத்தில், 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவை அரசின் விதிமுறைகளை மீறி, செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் ஆகியன, செங்கல் சூளைகள் தொடர்ந்துஇயங்கவும், செம் மண்ணை வெட்டி எடுக்கவும், செங்கல்லை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவும், மண்ணை குவித்து வைக்கவும் தடை விதித்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடையை மீறி, சின்னதடாகம் வட்டாரத்திலுள்ள மூன்று செங்கல் லாரிகளில், செங்கல் லோடு ஏற்றி செல்வதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, துடியலுார் வருவாய் ஆய்வாளர் ஆகாஷ் குமார், தடாகம் போலீசில் புகார் செய்தார். தடாகம் எஸ்.ஐ., ஜான் ஜெனியின் சிங், கணுவாய் சந்திப்பில் நடத்திய திடீர் சோதனையில், மூன்று லாரிகளில் செங்கல் லோடு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதைடுத்து, டிரைவர்கள் ரமேஷ், சத்யராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இன்னொரு லாரியின் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக, செங்கல் சூளை உரிமையாளர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X