பொது செய்தி

தமிழ்நாடு

வீடு, வீடாக பரிசோதனை: பேரூராட்சி நிர்வாகம் தீவிரம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், வீடு வீடாக பரிசோதனை செய்து, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.அன்னுார் பேரூராட்சியில், குமரன் நகர், குமாரபாளையம், உப்புத்தோட்டம் என பல இடங்களில், 100க்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, பேரூராட்சி சார்பில், தினமும் ஒரு வார்டில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.நேற்றுமுன்தினம் குமாரபாளையத்திலும், நேற்று

அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், வீடு வீடாக பரிசோதனை செய்து, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.அன்னுார் பேரூராட்சியில், குமரன் நகர், குமாரபாளையம், உப்புத்தோட்டம் என பல இடங்களில், 100க்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, பேரூராட்சி சார்பில், தினமும் ஒரு வார்டில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.நேற்றுமுன்தினம் குமாரபாளையத்திலும், நேற்று சொக்கம்பாளையத்திலும், சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வீடுகளில் உள்ள அனைவருக்கும் நாடி துடிப்பு மற்றும் உடல் வெப்ப பரிசோதனைகள் செய்யப்பட்டன. இரும்பு சத்து மாத்திரை, வைட்டமின் மாத்திரை, கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டன. 100 வீடுகளுக்கு, ஒரு கணக்கெடுப்பாளரும், 500 வீடுகளுக்கு மேற்பார்வையாளரும் நியமிக்கப்பட்டு, தினமும் சளி, காய்ச்சல் உள்ளோர் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.இந்த பட்டியல், சுகாதார துறைக்கு அனுப்பப்பட்டு காய்ச்சல், சளி உள்ளவர்களுக்கு தொற்றுப் பரிசோதனை செய்யவும் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று, சொக்கம் பாளையத்தில் நடந்த முகாமில், பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.'இதுவரை, 2,000ம் வீடுகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது' என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X