பொது செய்தி

தமிழ்நாடு

கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம்: வாய்ப்பை பயன்படுத்த வேளாண் துறை அழைப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:கரும்பு பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, வேளாண் துறை சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.சொட்டு நீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் அரசு மானியம் வழங்குகிறது. கரும்புக்கு சிறப்பு திட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க, அதிகபட்ச தகுதிகளை, தமிழக அரசு வேளாண் துறை, கூடுதல் மானியம் வழங்க

மேட்டுப்பாளையம்:கரும்பு பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, வேளாண் துறை சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.சொட்டு நீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் அரசு மானியம் வழங்குகிறது. கரும்புக்கு சிறப்பு திட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க, அதிகபட்ச தகுதிகளை, தமிழக அரசு வேளாண் துறை, கூடுதல் மானியம் வழங்க வரையறை செய்துள்ளது.காரமடை வட்டாரத்தில், நடப்பு நிதியாண்டில் அனைத்து பயிர்களுக்கும், 205 எக்டேர் நிலப்பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, கரும்பு பயிரிடும் விவசாயிகளை, ஊக்குவிக்கும் பொருட்டு, கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு, தமிழக அரசு வழக்கமான மானியத்துடன், கூடுதல் மானியம் வழங்க அறிவித்துள்ளது.கரும்பு பயிர் செய்துள்ள, சிறு, குறு விவசாயிகளுக்கு, மேற்பரப்பு திறந்த கிணறு வாயிலாக சொட்டு நீர் பாசனத்திற்கு, வழக்கமான பயிர் மானியம் ஒரு எக்டேருக்கு, ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 133 ரூபாய் வழங்கப்படுகிறது.மேலும், 38,235 ரூபாய் கூடுதலாக வழங்கி, மொத்தமாக, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 368 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு, வழக்கமான பயிர் மானியத்துடன், ஒரு எக்டேருக்கு, 87 ஆயிரத்து 880 ரூபாயுடன், 38 ஆயிரத்து, 235 ரூபாய் கூடுதலாக சேர்த்து, மொத்தமாக, ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 115 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.ஆழ்குழாய் கிணறு வாயிலாக, சொட்டுநீர் பாசனம் அமைக்கும் சிறு, குறு, விவசாயிகளுக்கு, வழக்கமான பயிர் மானியத்துடன், ஒரு எக்டேருக்கு, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து, 133 ரூபாயுடன் கூடுதலாக, 24 ஆயிரத்து 711 ரூபாய் சேர்த்து, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து 844 ரூபாய் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு, வழக்கமான பயிர் மானியத்துடன், ஒரு எக்டேருக்கு 87 ஆயிரத்து, 880 ரூபாயுடன் கூடுதலாக, 24 ஆயிரத்து, 711 ரூபாய் சேர்த்து, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 591 ரூபாய் வழங்கப்பட உள்ளது.கீழ்ப்பரப்பு திறந்த கிணறு வாயிலாக, சொட்டு நீர் பாசனத்திற்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு வழக்கமான பயிர் மானியம் ஒரு எக்டேருக்கு, ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 133 ரூபாயுடன் கூடுதலாக, 49 ஆயிரத்து 758 ரூபாய் சேர்த்து, ஒரு லட்சத்து, 62 ஆயிரத்து, 891 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு வழக்கமான பயிர் மானியம், ஒரு எக்டேருக்கு, 87 ஆயிரத்து, 880 ரூபாயுடன் கூடுதலாக, 49 ஆயிரத்து 758 ரூபாய் சேர்த்து மொத்தமாக, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 638 ரூபாய் வழங்கப்பட உள்ளது.கீழ்ப்பரப்பு ஆழ்குழாய் கிணறு வாயிலாக, சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு வழக்கமான பயிர் மானியம், ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து 133 ரூபாயுடன் கூடுதலாக, 36 ஆயிரத்து 234 ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக, ஒரு லட்சத்து, 49 ஆயிரத்து, 367 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு வழக்கமான பயிர் மானியம் ஒரு எக்டேருக்கு 87 ஆயிரத்து, 880 ரூபாயுடன் கூடுதலாக, 36 ஆயிரத்து, 234 ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக, ஒரு லட்சத்து, 24 ஆயிரத்து 114 ரூபாய் வழங்கப்பட உள்ளது.இந்த அரிய வாய்ப்பை அனைத்து கரும்பு பயிரிடும் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளும்படி, வேளாண் துறை அறிவித்துள்ளது. மேலும் திட்டத்தின் வாயிலாக, தண்ணீர் சிக்கனம், உரம் சிக்கனம், கூலி ஆட்கள் குறைவு, சுலபமான களை மேலாண்மை, அதிகப்படியான மகசூல், அதிக வருவாய், தரமான விளைபொருட்கள் ஆகிய பயன்களை கொண்டுள்ளதால், அனைத்து கரும்பு பயிரிடும் விவசாயிகள், இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறலாம்.இதுவரை சொட்டு நீர் பாசனம் அமைக்காத விவசாயிகள், இதற்கு முன்பு மானியம் பெற்று, சொட்டு நீர் பாசனம் அமைத்து, ஏழு ஆண்டுகள் கடந்த விவசாயிகள், மானியம் பெற விண்ணப்பிக்க தகுதி உள்ள விவசாயிகள் ஆவர்.விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஆதார் கார்டு ஜெராக்ஸ், நில வரைபடம், மூன்று பாஸ்போர்ட் போட்டோக்கள் ஆகியவற்றை, வட்டார வேளாண் துறை அலுவலகத்தில் கொடுத்து, சொட்டு நீர் பாசனம் அமைக்க, பெயரை பதிவு செய்து கொள்ளும்படி, மேட்டுப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X