எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

குலாம் நபிக்கு ராஜ்யசபா 'சீட்' : தி.மு.க.,வுக்கு காங்., கோரிக்கை

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள, மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கும்படி, தி.மு.க.,விடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதில், குலாம் நபி ஆசாதை தேர்வு செய்ய, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமது ஜான், சில மாதங்களுக்கு முன் இறந்தார். அந்த கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்களாக இருந்த முனுசாமி,
குலாம் நபி, ராஜ்யசபா , சீட் தி.மு.க., காங்., கோரிக்கை

தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள, மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கும்படி, தி.மு.க.,விடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதில், குலாம் நபி ஆசாதை தேர்வு செய்ய, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முகமது ஜான், சில மாதங்களுக்கு முன் இறந்தார். அந்த கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்களாக இருந்த முனுசாமி, வைத்திலிங்கம், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,க்களாகி விட்டனர். இதனால் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கும் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தமிழக சட்டசபையில், தி.மு.க.,வுக்கு உள்ள பலத்தால், மூன்று இடங்களையும் அக்கட்சியால் கைப்பற்ற முடியும். இந்நிலையில் இந்த மூன்று இடங்களில், தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கும்படி, தி.மு.க.,விடம், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரிலிருந்து, 2015ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் பிப்ரவரியில் முடிந்தது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபின், அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனால் தமிழகத்திலிருந்து குலாம் நபி ஆசாதை, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்ய, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், தி.மு.க.,விடம், தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. - புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
12-ஜூன்-202120:22:23 IST Report Abuse
M  Ramachandran காங்கிரஸில் உள்ள ஒரு நல்ல பார்லிமெண்டரின் தீ மு க்க உதவலாம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூன்-202100:56:24 IST Report Abuse
தல புராணம் அந்த தவறை டீம்கா ஒருபோதும் செய்யக்கூடாது.. மூன்று இடங்களும் டீம்காவுக்கே..
Rate this:
Cancel
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
11-ஜூன்-202119:25:26 IST Report Abuse
என்றும் இந்தியன் ஓஹோ முஸ்லீம் நேரு காங்கிரஸ் நடவடிக்கை ஆரம்பிச்சிருச்சா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X