பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி மையம் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:'ஊராட்சிகளில் தடுப்பூசி மையம் அமைத்து, மக்களின் அலைச்சலை போக்க வேண்டும்' என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள, வைரஸ் தொற்று சிகிச்சை மையத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு செய்தார். வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை பார்வையிட்டு
 தடுப்பூசி மையம் அமைக்க  அமைச்சரிடம் கோரிக்கை

கருமத்தம்பட்டி:'ஊராட்சிகளில் தடுப்பூசி மையம் அமைத்து, மக்களின் அலைச்சலை போக்க வேண்டும்' என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள, வைரஸ் தொற்று சிகிச்சை மையத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு செய்தார். வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். 'அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்' என, பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர், அமைச்சரிடம் அளித்த மனுவில், 'ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால், தடுப்பூசிக்காக பல இடங்களுக்கு சுற்றித்திரிய வேண்டியுள்ளது. அதனால், ஊராட்சிகளிலேயே தடுப்பூசி மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X