கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பஞ்சாயத்து அலுவலகங்களில் கேமரா அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ராஜகுரு தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், கிராம பஞ்சாயத்துக்களில், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஜாதி பாகுபாட்டுடன் நடத்துகின்றனர். 1997 முதல் பஞ்சாயத்து தலைவர்களாக

சென்னை:தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ராஜகுரு தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், கிராம பஞ்சாயத்துக்களில், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஜாதி பாகுபாட்டுடன் நடத்துகின்றனர்.

1997 முதல் பஞ்சாயத்து தலைவர்களாக பதவி வகித்த, ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். பஞ்சாயத்துக்களில் தலைவராக இருக்கும் ஆதிதிராவிட சமூகத்தினரை, தேசியக்கொடி ஏற்ற அனுமதிப்பது இல்லை. பஞ்சாயத்து அலுவலகங்களில், அவர்களுக்கு இருக்கை வழங்கப்படுவதும் இல்லை. ஆவணங்களை பார்க்க அனுமதிப்பது இல்லை. ஜாதி பெயரை சொல்லி அழைக்கின்றனர்.

துணைத் தலைவராக பதவி வகிக்கும் இதர ஜாதியினரால் மிரட்டப்படுகின்றனர். ஆதிதிராவிட தலைவர்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களை குறைக்க வேண்டும் என்றால், கிராம பஞ்சாயத்துக்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதுகுறித்து, அரசுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலங்களில்,கண்காணிப்பு கேமரா பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X