பொது செய்தி

தமிழ்நாடு

வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி துவக்கம்! காரமடை பேரூராட்சியில் 'விறுவிறு'

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;காரமடை பேரூராட்சியில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று, கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காரமடை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, வீடுகளில் உள்ளவர்களை கணக்கெடுக்க, பேரூராட்சி நிர்வாகம்

மேட்டுப்பாளையம்;காரமடை பேரூராட்சியில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று, கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காரமடை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, வீடுகளில் உள்ளவர்களை கணக்கெடுக்க, பேரூராட்சி நிர்வாகம் களப்பணியாளர்களை நியமித்துள்ளது. பணியாளர்கள் வீடு வீடாக சென்று, கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காரமடை பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:காரமடை பேரூராட்சியில், அனைத்து வார்டுகளில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து, 120 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர்கள் என்ற விகிதத்தில் மொத்தம், 103 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்காணிக்க, 5 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். களப்பணியாளர்கள் தினமும், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்த பகுதிகளில், வீடு வீடாகச் சென்று, வசிக்கும் மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் ஏதேனும் அறிகுறி உள்ளதா என, கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படும். நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவர். இப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.நேற்று முன்தினம், கோவை வடக்கு ஆர்.டி.ஒ., ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா ஆகியோர், களப்பணிகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்களிடம், களப்பணியாளர்கள் தினமும் வீடுகளுக்கு வந்து கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனரா என ஆர்.டி.ஓ., கேட்டறிந்தார்.அம்பேத்கர் நகரில் ஒருவருக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தது. அப்பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து, அங்கு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. காரமடை பேரூராட்சியில் இதுவரை, 744 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சை மையங்களில், சிகிச்சை பெற்ற, 665 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 79 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பேரூராட்சி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வைரஸ் தொற்று பாதித்தவர்களின் பகுதிகளிலும், கிருமிநாசினி மருந்து அடித்தும், குளோரின் பவுடர் துாவப்படுகின்றன. மேலும் தொடர்ந்து வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு, செயல் அலுவலர் கூறினார்.ஆய்வின்போது, காரமடை வருவாய் ஆய்வாளர் தெய்வ பாண்டியம்மாள், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X