சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் தகராறு: தெளிந்ததும் வருத்தம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சூலுார்:எங்கள விட்டுருங்க... இனிமேல் இப்படி செய்யமாட்டோம்... என, போதை தெளிந்த வாலிபர்கள் வருத்தம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஊரடங்கு ரோந்து பணியில் சூலுார் போலீசார், இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சூலுார் அடுத்தகண்ணம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, விதிகளை மீறி திரிந்த மூன்று நபர்களை

சூலுார்:எங்கள விட்டுருங்க... இனிமேல் இப்படி செய்யமாட்டோம்... என, போதை தெளிந்த வாலிபர்கள் வருத்தம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஊரடங்கு ரோந்து பணியில் சூலுார் போலீசார், இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சூலுார் அடுத்தகண்ணம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, விதிகளை மீறி திரிந்த மூன்று நபர்களை விசாரித்தனர். மதுபோதையில் அவர்கள், போலீசாருடன் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்களை மடக்கி, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், தீபக் மற்றும் பிரகாஷ் என்பது தெரிந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், போதை தெளிந்த வாலிபர்கள், தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், 'போலீசார் இரவு, பகலாக மக்களுக்காக வேலை செய்கின்றனர். போதையால் அவர்களுடன் வாக்குவாதம் செய்ததற்கு வருந்துகிறோம். இனிமேல் இப்படி செய்யமாட்டோம். எங்களை விட்டுருங்க... என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X