பொது செய்தி

தமிழ்நாடு

சார் --------- பதிவாளர்கள் 'டிமிக்கி' கிடுக்கிப்பிடி போடுமா துறை?

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:பாதியில் ஓட்டம் பிடிக்கும் சார் - பதிவாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி' போடும் வகையில் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, மே 10ல் மூடப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்கள், ஜூன் 7ல் திறக்கப்பட்டன. கூட்ட நெரிசலை தவிர்க்க 50 சதவீத 'டோக்கன்'களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, சார் - பதிவாளர்கள், காலை 10:00

சென்னை:பாதியில் ஓட்டம் பிடிக்கும் சார் - பதிவாளர்களுக்கு 'கிடுக்கிப்பிடி' போடும் வகையில் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, மே 10ல் மூடப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்கள், ஜூன் 7ல் திறக்கப்பட்டன. கூட்ட நெரிசலை தவிர்க்க 50 சதவீத 'டோக்கன்'களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, சார் - பதிவாளர்கள், காலை 10:00 மணிக்கு பதிவு பணிகளை துவக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு 10 டோக்கன்கள் என்ற அடிப்படையில், மாலை 5:00 மணி வரை பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில், அலுவலகத்தில் சார் - பதிவாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் சார் - பதிவாளர்கள் மதிய உணவு இடைவேளைக்கு பின், பணியில் இருப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. டோக்கன் பெற்ற பொதுமக்கள் பத்திரப் பதிவுக்கு வரும்போது ஏமாற்றம் அடையும் நிலை ஏற்படுகிறது.

இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:சார் - பதிவாளர்கள், மாலை 5:00 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். கொரோனா காலம் என்பதால், மேலதிகாரிகள் நெருக்கடி கொடுக்காமல் உள்ளனர்.

ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகமும், நேரலை முறையில் தலைமை அலுவலக கண்காணிப்பில் உள்ளது. பணியில் இல்லாத சார் - பதிவாளர்கள் குறித்து, தலைமை அலுவலகத்துக்கு வெளிப்படையாக தெரிந்து விடும்.இந்நிலை தொடர்வதால், தலைமை அலுவலக அதிகாரிகள், கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X