பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட் திறப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், ஒரு நிமிடத்திற்கு, 300 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட் திறக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், 70 படுக்கைகளுடன், கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதில், 46 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டிருந்தது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தடையில்லாமல், ஆக்சிஜன் வழங்க,
 அரசு மருத்துவமனையில்  ஆக்சிஜன் பிளான்ட் திறப்பு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், ஒரு நிமிடத்திற்கு, 300 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட் திறக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், 70 படுக்கைகளுடன், கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதில், 46 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டிருந்தது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தடையில்லாமல், ஆக்சிஜன் வழங்க, மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட் அமைக்கும்படி, மருத்துவமனை டாக்டர்கள், அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர். இதையறிந்த கே.ஜி., குழுமத் தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் ஆகியோர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளாண்ட் அமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, கே.ஜி., டெனிம் கம்பெனி நிர்வாகத்தினர், 50 லட்சம் மதிப்பில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட் அமைத்தனர்.இதில், ஒரு நிமிடத்துக்கு, 300 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உடையது. இதன் திறப்பு விழா, நேற்று அரசு மருத்துவமனையில் நடந்தது.இந்த ஆக்சிஜன் உற்பத்தி பிளான்டை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், கே.ஜி., டெனிம் துணைத்தலைவர் செல்வகுமார், செயல் அலுவலர் சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர் வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X