பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக, அரசு கட்டடங்களின் கட்டுமான பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பொதுப்பணி துறை வாயிலாக, பல அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. நீர்வள துறை வாயிலாக, ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்களை மேம்படுத்தும் பணி நடக்கிறது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, பல கோடி ரூபாய்க்கான கட்டுமான பணிகள், தற்போது நடந்து

சென்னை:கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக, அரசு கட்டடங்களின் கட்டுமான பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணி துறை வாயிலாக, பல அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. நீர்வள துறை வாயிலாக, ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்களை மேம்படுத்தும் பணி நடக்கிறது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, பல கோடி ரூபாய்க்கான கட்டுமான பணிகள், தற்போது நடந்து வருகின்றன. கட்டுமான பணிகளை மேற்கொள்ள, ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழைக்கு முன், திருச்சி முக்கொம்பு கதவணை, ஆதனுார் - குமாரமங்கலம் கதவணை உள்ளிட்ட பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டு இருந்தது. இப்பணிகளை முடித்தால், மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரை, இதில் சேமிக்க முடியும். அதேபோல, 11 புதிய அரசு மருத்துவ கல்லுாரிகளின் கட்டுமான பணிகள் மற்றும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் கட்டுமானங்களையும் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில தொழிலாளர்கள் பலரும், சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தமிழகம் மற்றும் ஆந்திர மாநில தொழிலாளர்கள் வாயிலாக, இப்பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் மணல், கட்டுமான கம்பி, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இந்த நேரத்தில் பணிகளை மேற்கொண்டால், கட்டுமான செலவு அதிகரிக்கும் என, ஒப்பந்த நிறுவனங்கள் அஞ்சுகின்றன. அதனால், தொழிலாளர் பற்றாக்குறை எனக் காரணம் கூறி, கட்டுமான பணிகளை கிடப்பில் போட்டுள்ளன. பல இடங்களில் ஆமை வேகத்தில் பணி நடக்கிறது. இதனால், குறித்த காலத்தில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X