சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் அருகே காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.சூலுார் எஸ்.எஸ்.ஐ., ரத்தினசாமி மற்றும் போலீசார் தங்கமாரி, ஊர்காவல் படையை சேர்ந்த மோகன்குமார் ஆகியோர், நேற்று காலை, அவிநாசி ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரில் சோதனையிட்டனர். அதில் இருந்த சூட்கேஸில், 48 மதுபாட்டில்கள்

சூலுார்:சூலுார் அருகே காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.சூலுார் எஸ்.எஸ்.ஐ., ரத்தினசாமி மற்றும் போலீசார் தங்கமாரி, ஊர்காவல் படையை சேர்ந்த மோகன்குமார் ஆகியோர், நேற்று காலை, அவிநாசி ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரில் சோதனையிட்டனர். அதில் இருந்த சூட்கேஸில், 48 மதுபாட்டில்கள் இருந்ததுதெரிந்தது.விசாரணையில், காரை ஓட்டி வந்தது, கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த சுதாகரன், 41 என்பதும், பெங்களூருவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் ஊரடங்கு உள்ளதால், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு சில நாட்களில் மட்டும், சூலுார் சுல்தான்பேட்டை ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், இரு லாரிகள் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட, 1,500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X