அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெறுப்பில் பெரியசாமி: 'மாஜி' மந்திரி குற்றச்சாட்டு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மதுரை:''அமைச்சர் பெரியசாமிக்கு கூட்டுறவுத் துறையை பற்றி ஒன்றும் தெரியவில்லை,'' என, அ.தி.மு.க., ஆட்சியில் அத்துறை அமைச்சராக இருந்த ராஜு தெரிவித்தார்.மதுரையில் பேட்டி அளித்த அமைச்சர் பெரியசாமி, ''அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கியது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதற்கு பதிலளித்து,

மதுரை:''அமைச்சர் பெரியசாமிக்கு கூட்டுறவுத் துறையை பற்றி ஒன்றும் தெரியவில்லை,'' என, அ.தி.மு.க., ஆட்சியில் அத்துறை அமைச்சராக இருந்த ராஜு தெரிவித்தார்.

மதுரையில் பேட்டி அளித்த அமைச்சர் பெரியசாமி, ''அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கியது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இதற்கு பதிலளித்து, அத்துறையின் முன்னாள் அமைச்சர் ராஜு கூறியதாவது: நாட்டில், தமிழகத்தில் மட்டுமே கூட்டுறவு துறை கணினிமயமாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டு, அனைத்து கடன் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் மீது, அ.தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பயிர்க்கடன் இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியாது. அமைச்சர் பெரியசாமிக்கு, கூட்டுறவு துறை பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல், அத்துறையில் உள்ளார்.அந்த துறையை, அவர் ஏற்றுக் கொள்ளாமல் மனவெறுப்பில் உள்ளார். ஒரு துறையை பற்றி குறை கூறும்போது தெரிந்து பேச வேண்டும். கொரோனா தடுப்பூசிகளை பெற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. டில்லிக்கு சென்று, தடுப்பூசியை கேட்டு பெற்றிருக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X