அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்கு அ.தி.மு.க.,- பதில்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:'கொரோனா தொற்றால் இறப்பவர்களுக்கு, சரியான இறப்பு சான்றிதழை வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையை, அரசு ஏற்படுத்த வேண்டும்' என, சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'கொரோனாவால் இறந்தவர்களுக்கு, இறப்பு சான்றிதழில், உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர்

சென்னை:'கொரோனா தொற்றால் இறப்பவர்களுக்கு, சரியான இறப்பு சான்றிதழை வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையை, அரசு ஏற்படுத்த வேண்டும்' என, சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:'கொரோனாவால் இறந்தவர்களுக்கு, இறப்பு சான்றிதழில், உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., தெரிவித்திருந்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அதை சரியாக புரிந்து கொள்ளாமல், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை தான் கடைப்பிடிப்பதாக, மறுப்பு தெரிவித்து உள்ளார்.

நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறபோது, கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய நிலையில், இணை நோயால் இறந்து விடுகிற நோயாளிகளுக்கும், கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் நோயாளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு, இறப்பு சான்றிதழ் வழங்கும்போது, கொரோனா இறப்பு என்று வழங்காமல், இணை நோயால் இறப்பு ஏற்பட்டதாக, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதைத் தான் பழனிசாமி., சுட்டிக்காட்டினார்.

'கொரோனா இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் தேவையில்லை' என்று, சென்னை உயர் நீதிமன்றமும், அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, உள்ளதை உள்ளபடி, இனியாவது கொரோனா தொற்றால் இறப்பவர்களுக்கு, சரியான இறப்பு சான்றிதழை வழங்கி, பாதிக்கப் பட்ட குடும்பங்களை காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையை, அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X