அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா வரவே முடியாது: அடித்து சொல்கிறார் வீரமணி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
வாணியம்பாடி:''சசிகலா ஒரு போதும் அ.தி.மு.க.,வுக்கு வர முடியாது,'' என, முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.வாணியம்பாடியில் அவர் அளித்த பேட்டி:முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., ஏற்கனவே அறிவித்துள்ளது போல, சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியதால், அவர் அ.தி.மு.க.,வில் இணைவதற்கு வாய்ப்புகள் இல்லை. சசிகலா ஒரு போதும், அ.தி.மு.க.,வுக்கு வர முடியாது. முன்னாள் அமைச்சர் சண்முகத்தை
 சசிகலா வரவே முடியாது: அடித்து சொல்கிறார் வீரமணி

வாணியம்பாடி:''சசிகலா ஒரு போதும் அ.தி.மு.க.,வுக்கு வர முடியாது,'' என, முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.

வாணியம்பாடியில் அவர் அளித்த பேட்டி:முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., ஏற்கனவே அறிவித்துள்ளது போல, சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியதால், அவர் அ.தி.மு.க.,வில் இணைவதற்கு வாய்ப்புகள் இல்லை. சசிகலா ஒரு போதும், அ.தி.மு.க.,வுக்கு வர முடியாது. முன்னாள் அமைச்சர் சண்முகத்தை எதிர்க்கட்சியினர் மிரட்டுகின்றனர்.

அவரிடம் எந்த பாச்சாவும் பலிக்காது. கடந்தாண்டு கொரோனா முதல் அலையை, பழனிசாமி., திறமையாக கையாண்டு, தொற்று அதிகரிப்பு, 10 ஆயிரத்தை தாண்டாமல் கட்டுக்குள் வைத்திருந்தார். தற்போது, தி.மு.க., ஆட்சியில் ஊரடங்கு இருந்தாலும், நிறைய பேர் சுற்றித் திரிகின்றனர். இதனால், கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாததால், பாதிப்பு, 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X