பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன கட்டமைப்பு நிறுவ மானியம் ஒதுக்கீடு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
உடுமலை:விவசாய நிலங்களில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்த, வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்க, 16.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, திருப்பூர் மாவட்டத்திற்கு, வேளாண்மை பயிர்களுக்கு, 2,800 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன கட்டமைப்பு அமைக்க, 16 கோடியே, 38 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்,

உடுமலை:விவசாய நிலங்களில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்த, வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்க, 16.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, திருப்பூர் மாவட்டத்திற்கு, வேளாண்மை பயிர்களுக்கு, 2,800 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன கட்டமைப்பு அமைக்க, 16 கோடியே, 38 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்துாவுவான் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனமும், நிலக்கடலை மற்றும் பயறுவகைகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகளும் அமைக்கலாம்.5 ஏக்கருக்கு குறைவாக உள்ள, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், 12.50 ஏக்கர் வரை உள்ள இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.நுண்ணீர் பாசன முறையால், குறைந்த நீரில் அதிக பரப்பளவு பயிர் சாகுபடி செய்யலாம். சொட்டு நீர் பாசன முறையில் பயிருக்கு தேவையான நீர் மற்றும் உரம் வேர்ப்பகுதிகளுக்கு நேரடியாக வழங்கப்படுவதால், நீர், உரச்செலவினங்கள் குறைவதோடு, தேவையற்ற களைகள் முளைப்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது. மண் இறுக்கம் குறைந்து பயிர்கள் நன்கு செழித்து வளர்வதால் அதிக மகசூல் கிடைக்கிறது.மேலும், குழாய் கிணறு மற்றும் துளை கிணறு அமைத்திட, 50 சதவீத மானியம், அதிக பட்சம் 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மின் மோட்டார் மற்றும் டீசல் பம்புசெட் நிறுவ, அதன் விலையில், 50 சதவீத மானியம் அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய், பைப் லைன் அமைக்க ஒரு ெஹக்டருக்கு, அதிகப்பட்சமாக ரூ.10 ஆயிரம், தரை நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.சொட்டு நீர் பாசன கருவிகளுக்கான பைப் லைன் அமைத்திட கால்வாய் தோண்டுவதற்கு, ெஹக்டேருக்கு, ரூ.3 ஆயிரம், வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன் பெற விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை அணுகலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X