பொது செய்தி

தமிழ்நாடு

சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதியில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், தக்காளி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளைவிக்கப்படும் தக்காளி, உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரளா மற்றும் பல்வேறு மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்து
 சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு

உடுமலை:உடுமலை பகுதியில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், தக்காளி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளைவிக்கப்படும் தக்காளி, உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரளா மற்றும் பல்வேறு மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.கொரோனா முழு ஊரடங்கு மற்றும் வியாபாரிகள் வருகை இல்லாததால், கடந்த வாரம், 14 கிலோ கொண்ட பெட்டி, 50 ரூபாய் வரை மட்டுமே விற்று வந்தது. அறுவடை செய்த விளை பொருட்களையும் விற்பனைக்கு கொண்டு வர முடியாத சிக்கல் ஏற்பட்டது.தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த வாரம் நிலவிய விலையால் பெரும்பாலான பகுதிகளில், செடிகளில் தக்காளி பறிக்காமல், வீணாகியது.மேலும், பருவ மழை துவங்கியுள்ளதால், சாகுபடி பணி மேற்கொள்ள, தக்காளிச்செடிகளை அழித்து, விவசாயிகள் உழவுப்பணி மேற்கொண்டனர். வழக்கமாக உடுமலை சந்தைக்கு, 7 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து இருக்கும் நிலையில், தற்போது, 2 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வரத்து காணப்படுகிறது. வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது. தற்போது, ஒரு பெட்டி, 150 முதல் 200 ரூபாய் வரை விற்று வருகிறது.விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி வரத்து குறைந்துள்ளதால், தற்போது விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் நிலவிய விலையால், கடும் நஷ்டம் ஏற்பட்டது; தற்போது ஓரளவு உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X