பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு காரணமாக தேங்காய்கள் தேக்கம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்;மடத்துக்குளம் பகுதியில், ஊரடங்கு காரணமாக பல டன் தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், தென்னை சாகுபடி பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய்கள், பல மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று விற்கப்படுகிறது. தோப்புகளுக்கு சென்று, நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்து, தங்கள்

மடத்துக்குளம்;மடத்துக்குளம் பகுதியில், ஊரடங்கு காரணமாக பல டன் தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், தென்னை சாகுபடி பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய்கள், பல மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று விற்கப்படுகிறது. தோப்புகளுக்கு சென்று, நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்து, தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து அதை உறித்து, பல நகரங்களுக்கு சென்று மொத்த விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது ஊரடங்கு காரணமாக, பல இடங்களில் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் தேங்கி உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கொரோனா தொற்று காரணமாக, தேங்காய் உறிக்க தொழிலாளர்கள் வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பல ஆயிரக்கணக்கான தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X