அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் திட்டம்: பரவும் பரபரப்பு ஆடியோ

Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், மீண்டும் எம்.எல்.ஏ., ஆக முயற்சி எடுத்து வருவதாக, சமூக வலைதளத்தில் 'ஆடியோ' பரவி வருகிறது.விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் சண்முகம். நடந்து முடிந்த தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.பின்னடைவுவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், மீண்டும் எம்.எல்.ஏ., ஆக முயற்சி எடுத்து வருவதாக, சமூக வலைதளத்தில் 'ஆடியோ' பரவி வருகிறது.

விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் சண்முகம். நடந்து முடிந்த தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.


பின்னடைவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு கிடைப்பதற்கு காரணமாக இருந்தும், தோல்வி அடைந்தது, அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன், விழுப்புரத்தில் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சண்முகம் பக்கத்தில் மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார் அமர்ந்திருந்தார்.

இதை மையமாக வைத்து, தற்போது சமூக வலைதளங்களில், ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட்ட சண்முகம் தோல்வியை சந்தித்தது, அ.தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமாக இருந்தவர்; சசிகலாவை தீவிரமாக எதிர்த்து வந்தவர்.

தற்போது எப்படியாவது மீண்டும் எம்.எல்.ஏ., ஆகும் கனவில் இருக்கிறார்.மயிலம் தொகுதியில், சண்முகத்தின் கவனிப்பால் எம்.எல்.ஏ.,வானவர் சிவகுமார். இது, ஊரறிந்த விஷயம். இவர், சில நாட்களாக சண்முகத்துடன் நெருக்கமாக வலம் வருகிறார்.இதனால், அவரை ராஜினாமா செய்ய வைத்து, மயிலம் தொகுதியில் சண்முகம் போட்டியிட எண்ணியுள்ளதாகவும், இதற்காக பேரம் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


பெரிய அளவில் கவனிப்பு

எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் சிவகுமாருக்கு பெரிய அளவில் கவனிப்பு மற்றும் அ.தி.மு.க.,வில் பதவியும் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆடியோ விவகாரம் குறித்து, முன்னாள் அமைச்சர் சண்முகம் மற்றும் பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார் ஆகிய இருவரும் எந்தவித மறுப்பும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜூன்-202107:26:09 IST Report Abuse
Bhaskaran முன்னாள் அமைச்சர் நிதானத்தில் இருக்கிறாரா என்று முதலில் சொல்லுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X