அரசியல் செய்தி

தமிழ்நாடு

36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை: சென்னையில் கையிருப்பு 1,060 தான்!

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில், 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை; சென்னையில் மட்டும், 1,060 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:தடுப்பூசிகள் அளவை, மத்திய அரசு, மக்களிடம் தெரிவிக்கக் கூடாது எனக் கூறியுள்ளது. ஆனால், தடுப்பூசிகள் குறித்து, மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பது தான் சரியாக

சென்னை:''தமிழகத்தில், 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை; சென்னையில் மட்டும், 1,060 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:தடுப்பூசிகள் அளவை, மத்திய அரசு, மக்களிடம் தெரிவிக்கக் கூடாது எனக் கூறியுள்ளது. ஆனால், தடுப்பூசிகள் குறித்து, மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பது தான் சரியாக இருக்கும்.தற்போது, 1,060 தடுப்பூசிகள் சென்னையில் உள்ளன. மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, ஜூன் மாதம், 37 லட்சம் தடுப்பூசிகள், தமிழகத்துக்கு அனுப்பப்படும் என சொல்லப்பட்டிருந்தது. அதில், 6.5 லட்சம் தடுப்பூசிகள், 9ம் தேதியில் இருந்து, 13ம் தேதிக்குள் வரும் என, மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் தொற்றின் அளவு மளமளவென சரிந்து வருகிறது. பாதிப்பின் அளவை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தற்போது, அரசு மருத்துவமனைகளில், 45 ஆயிரத்து, 484 படுக்கைகள் காலியாக உள்ளன. ஆக்கப்பூர்வமான அறிவுரைகள் அல்லது குறைகளை சுட்டிக்காட்டினால், அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, எழும்பூரில்உள்ள தமிழக மருத்துவ பணிகள் கழகத்தில், அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பேரிடர் காலத்துக்கு தேவையான எல்லா வகையான மருந்துகளும், மருத்துவ பணிகள் கழகத்திடம் கையிருப்பு இருக்கிறது. 'ரெம்டெசிவிர்' மருந்துக்கு ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவியது. தற்போது, மருந்து வழங்கப்படுவதில் சறுக்கல்கள் சரிசெய்யப்பட்டு, 9.5 லட்சம் மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய, 'ஆம்போடெரிசின் - பி' மருந்தை பொறுத்தவரை, 9,500 எண்ணிக்கையில் கையிருப்பில் உள்ளன. 'இதற்கு மாற்று மருந்தாக, ஐ.சி.எம்.ஆர்., வழிகாட்டுதல்படி, 'பொசக்னோசோல்' மாத்திரை, 90 ஆயிரம் கொள்முதல் செய்ய பணம் செலுத்தப்பட்டு இதுவரை, 42 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. அதில், 39 ஆயிரத்து, 500 மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.

மாநிலங்களுக்கு, 75 சதவீத தடுப்பூசியை, மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கும் என, பிரதமர் அறிவித்து உள்ளார். மாநில நேரடி கொள்முதலில், நேற்று 85 ஆயிரம் தடுப்பூசிகள், தமிழகத்துக்கு வந்து உள்ளன. அதை மாவட்டங்களுக்கு பிரித்தனுப்பும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X