பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லி கொட்டி பல மாசமாச்சுங்க! தார் போடுவதையே மறந்தாச்சு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரப்பகுதியில், புதிய ரோடு போடும் பணிக்காக ஜல்லிக் கற்கள் கொட்டி, மூன்று மாதங்கள் ஆகியும், தார் போடப்படாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த, ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக நகர குடியிருப்பு பகுதிகளில் ரோடுகள் தோண்டப்பட்டன.ஆள் இறங்கும்
 ஜல்லி கொட்டி பல மாசமாச்சுங்க! தார் போடுவதையே மறந்தாச்சு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரப்பகுதியில், புதிய ரோடு போடும் பணிக்காக ஜல்லிக் கற்கள் கொட்டி, மூன்று மாதங்கள் ஆகியும், தார் போடப்படாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த, ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக நகர குடியிருப்பு பகுதிகளில் ரோடுகள் தோண்டப்பட்டன.ஆள் இறங்கும் குழி அமைத்தல், குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் இருந்தன. குடியிருப்பு பகுதிகளில் குண்டும், குழியுமாக உருமாறிய ரோட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையானது.இந்நிலையில், பணிகள் முடிந்த இடங்களில் ரோடு போடும் பணி கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன. பல இடங்களில் ஜல்லிக்கற்களும் பரப்பப்பட்டன. சில இடங்களில் மூன்று மாதங்களாக, ஜல்லி பரப்பி அப்படியே விடப்பட்டுள்ளது. இதுவரை தார் போடப்படவில்லை.டாக்டர் முனுசாமி வீதி, சுப்பு செட்டி வீதி; ஜோதிநகர் ருக்மணியம்மாள் பள்ளி அருகே மயில்சாமி வீதி, பி.கே., கந்தசாமி சாலை, அரவிந்த சாலை, வேதாத்திரி மகரிஷி சாலை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் ரோடு போடுவதற்காக ஜல்லி கற்கள் பரப்பி மூன்று மாதங்கள் ஆகிறது. தார் போடாததால், மக்கள் அவசரத் தேவைக்குக் கூட வாகனங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக, புகார் தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு போடுவதற்காக ஜல்லி கற்கள் கடந்த மூன்று மாதத்துக்கு முன் பரப்பிவிடப்பட்டன. அதன் பின் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டாலும் முறையான தகவல்கள் இல்லை.ரோடுகளில் பரந்து கிடக்கும் ஜல்லி கற்களால் விபத்துகள் ஏற்படுகிறது; வாகனங்கள் பழுதாகின்றன. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கினால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியது உள்ளிட்ட காரணங்களினால் பணிகள் தாமதமாகிறது. விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X