பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் 14ல் திறக்க ஆந்திரா ஒப்புதல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்துக்கு, வரும் 14ம் தேதி கிருஷ்ணா நீர் திறக்க, ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.ஏப்ரலில் கடிதம்தமிழகத்தின் தேவைக்காக, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, சாய்கங்கை கால்வாயில், ஆந்திர மாநில அரசு திறக்க வேண்டும். முறைப்படி முழு ஒதுக்கீட்டு நீரையும், ஆந்திர அரசு வழங்குவது கிடையாது. கடந்த, 2019 - 20ம் ஆண்டு நீர் வழங்கும்

சென்னை:தமிழகத்துக்கு, வரும் 14ம் தேதி கிருஷ்ணா நீர் திறக்க, ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.


ஏப்ரலில் கடிதம்

தமிழகத்தின் தேவைக்காக, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, சாய்கங்கை கால்வாயில், ஆந்திர மாநில அரசு திறக்க வேண்டும். முறைப்படி முழு ஒதுக்கீட்டு நீரையும், ஆந்திர அரசு வழங்குவது கிடையாது. கடந்த, 2019 - 20ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், 8.05 டி.எம்.சி., நீர்; 2020 - 21ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில் 7.65 டி.எம்.சி., நீர் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

தற்போது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், 6.91 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக, 4 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் என, நீர்வள துறை வாயிலாக, ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு ஏப்ரலில் கடிதம் எழுதப் பட்டது. அதனால், மே மாதம் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திறக்கப்படவில்லை.


நீர் திறப்பதாக உறுதி

இந்நிலையில், மீண்டும்தமிழக நீர்வளத் துறை வாயிலாக, ஆந்திர மாநில நீர்வளத் துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதை ஏற்ற ஆந்திர அதிகாரிகள், வரும் 14ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு நீர் திறப்பதாக உறுதி அளித்து உள்ளனர். இந்த நீர், தமிழகத்தின் ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயின்ட்' எல்லைக்கு, 16ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X