பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடி குடியிருப்பில் சப் - கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தியில் பழங்குடி மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் பழங்குடியினரில் பெரும்பாலோனார், வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் வனத்துறையில் பணியாற்றுகின்றனர்.நேற்று, டாப்சிலிப் கோழிகமுத்தியில் சப் - கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், பள்ளி
 பழங்குடி குடியிருப்பில் சப் - கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தியில் பழங்குடி மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் பழங்குடியினரில் பெரும்பாலோனார், வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் வனத்துறையில் பணியாற்றுகின்றனர்.நேற்று, டாப்சிலிப் கோழிகமுத்தியில் சப் - கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், பள்ளி மாணவர்கள் படிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.சப் -கலெக்டர் கூறுகையில், ''கோழிகமுத்தியில் உள்ள பழங்குடியின மக்களிடம், குறைகள் கேட்டறியப்பட்டது. சிலர் ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை; முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க, துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X