பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
உடுமலை:தமிழகத்தில் கல்வி தொடர்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை 'கல்வி தொலைக்காட்சி' வழங்கி வருகிறது. ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தே கற்க பெரிதும் உதவுவதும் இதுவே. இந்நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 'கல்வி தொலைக்காட்சி'யில் நேற்றுமுன்தினம் முதல் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பாகிறது. இதற்கான அட்டவணை கல்வித்துறை

உடுமலை:தமிழகத்தில் கல்வி தொடர்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை 'கல்வி தொலைக்காட்சி' வழங்கி வருகிறது. ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தே கற்க பெரிதும் உதவுவதும் இதுவே. இந்நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 'கல்வி தொலைக்காட்சி'யில் நேற்றுமுன்தினம் முதல் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பாகிறது. இதற்கான அட்டவணை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும், 30 நிமிடங்கள் வீதம் திங்கள் முதல் வெள்ளி வரை ஒலிபரப்பாகிறது. காலை, 8:00 மணிக்கு துவங்கி, மாலை, 4:30 வரை வகுப்புகள் நடக்கின்றன.ஜூன் 16 வரை பாடவாரியாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீட்டில் இருந்தபடியே கற்றல் பணியில் ஈடுபடுவதை வகுப்பு ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X