பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை; பசுமையான தேயிலை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத் துவங்கியுள்ளன.வால்பாறையில் தேயிலை தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.இது தவிர காபி, மிளகு, ஏலம் போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு
 பருவமழை; பசுமையான தேயிலை

வால்பாறை:வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத் துவங்கியுள்ளன.வால்பாறையில் தேயிலை தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.இது தவிர காபி, மிளகு, ஏலம் போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு வாரமாக வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை துவங்கி, பரவலாக பெய்து வருகிறது.இதனால் தேயிலை எஸ்டேட்களில் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அணைகளின் நீர்மட்டம்வால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்வதால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 50.03 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 232 கன அடி நீர் வரத்து உள்ளது.இதேபோல, 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 26.88 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 210 கன அடி நீர் வரத்து உள்ளது.வால்பாறையில் நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 21, சோலையாறு - 8, மேல்நீராறு - 13, கீழ்நீராறு - 11, பரம்பிக்குளம் - 3, என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X