சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகரிஷி பள்ளி நிர்வாகிகளிடம் பாலியல் புகார் குறித்து விசாரணை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகளிடம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.சென்னை, சேத்துப்பட்டில், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி மாணவியருக்கு வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன், 51, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு

சென்னை:மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகளிடம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.

சென்னை, சேத்துப்பட்டில், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி மாணவியருக்கு வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன், 51, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பாதிக்கப்பட்ட மாணவியர், போலீஸ் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆனந்தன், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், 'சம்மன்' அனுப்பி இருந்தது. அதை ஏற்ற சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள், பிரேமலதா, ப்ரீத்தி நாராயணன் ஆகியோர் நேற்று காலை 11:00 மணிக்கு ஆஜராயினர்.அவர்களிடம் மாலை 4:30 மணி வரை, கமிஷனின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் சரண்யா ஜெயகுமார் உள்ளிட்டோர் விசாரித்தனர்.-


பேத்தியை பார்க்க அனுமதி கோரி மனு

சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் - வேளாங்கண்ணி தம்பதியின் மகள் எப்சிராணி. இவருக்கும், மயிலாடுதுறை, கொடியலுாரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், 2018ல் திருமணம் நடந்தது.மனைவி கர்ப்பமாக இருந்த போது, ராஜேஷ் பிரிந்து விட்டார். எப்சிராணிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

ஜன., 13ல், வீட்டு மாடியில் கால் தவறி விழுந்து, எப்சிராணி இறந்துவிட்டார். அதன்பின் ராஜேஷ் தன் மகளை துாக்கிச் சென்று விட்டார். குழந்தையை பார்க்க ஆறுமுகம், வேளாங்கண்ணி இருவரையும், ராஜேஷ் அனுமதிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. 'பேத்தியை பார்க்க அனுமதி பெற்றுத்தர வேண்டும். பேத்தி எங்களுடன் வசிக்க விரும்புகிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்' என, ஆறுமுகம், வேளாங்கண்ணி ஆகியோர், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனில் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X