பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதித்துறை செயலருக்கு சி.எம்.டி.ஏ., கூடுதல் பொறுப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:'வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா, சி.எம்.டி.ஏ., துணை தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் தலைவராக, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நியமிக்கப்படுவார். இவருக்கு அடுத்து, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், துணை தலைவராக நியமிக்கப்படுவார். இதற்கு அடுத்த நிலையில்

சென்னை:'வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா, சி.எம்.டி.ஏ., துணை தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் தலைவராக, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நியமிக்கப்படுவார். இவருக்கு அடுத்து, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், துணை தலைவராக நியமிக்கப்படுவார். இதற்கு அடுத்த நிலையில் தான், உறுப்பினர் செயலர் பதவிகள் வரும். இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில், துணை தலைவர் நியமிக்கப்பட வில்லை.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர்களே, சி.எம்.டி.ஏ., துணை தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தனர். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முழுநேர துணை தலைவர் நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதும், துறையின் முதன்மை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானாவிடம், துணை தலைவர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இதனால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கட்டுமான துறையினர் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். எனவே, முழுநேர துணை தலைவரை நியமிக்க, தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X