அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் திட்டம்: பரவும் பரபரப்பு ஆடியோ

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், மீண்டும் எம்.எல்.ஏ., ஆக முயற்சி எடுத்து வருவதாக, சமூக வலைதளத்தில் 'ஆடியோ' பரவி வருகிறது.விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் சண்முகம். நடந்து முடிந்த தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். பின்னடைவு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு
மாஜி ,அமைச்சர் திட்டம்: பரவும் பரபரப்பு ஆடியோ

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், மீண்டும் எம்.எல்.ஏ., ஆக முயற்சி எடுத்து வருவதாக, சமூக வலைதளத்தில் 'ஆடியோ' பரவி வருகிறது.விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் சண்முகம். நடந்து முடிந்த தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.


பின்னடைவு



வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு கிடைப்பதற்கு காரணமாக இருந்தும், தோல்வி அடைந்தது, அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன், விழுப்புரத்தில் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சண்முகம் பக்கத்தில் மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார் அமர்ந்திருந்தார்.
இதை மையமாக வைத்து, தற்போது சமூக வலைதளங்களில், ஒரு ஆடியோ வெளியாகி

உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட்ட சண்முகம் தோல்வியை சந்தித்தது, அ.தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நெருக்கமாக இருந்தவர்; சசிகலாவை தீவிரமாக எதிர்த்து வந்தவர். தற்போது எப்படியாவது மீண்டும் எம்.எல்.ஏ., ஆகும் கனவில் இருக்கிறார்.மயிலம் தொகுதியில், சண்முகத்தின் கவனிப்பால் எம்.எல்.ஏ.,வானவர் சிவகுமார். இது, ஊரறிந்த விஷயம். இவர், சில நாட்களாக சண்முகத்துடன் நெருக்கமாக வலம் வருகிறார்.இதனால், அவரை ராஜினாமா செய்ய வைத்து, மயிலம் தொகுதியில் சண்முகம் போட்டியிட எண்ணியுள்ளதாகவும், இதற்காக பேரம் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


பெரிய அளவில் கவனிப்பு



எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் சிவகுமாருக்கு பெரிய அளவில் கவனிப்பு மற்றும் அ.தி.மு.க.,வில் பதவியும் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ விவகாரம் குறித்து, முன்னாள் அமைச்சர் சண்முகம் மற்றும் பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார் ஆகிய இருவரும் எந்தவித மறுப்பும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
14-ஜூன்-202111:07:46 IST Report Abuse
pattikkaattaan அப்படி நடந்து திரு ஷண்முகம் போட்டியிட்டால் , எங்கள் தியாகத்தாய் சின்னம்மா கண்டிப்பாக அவரை ஜெயிக்கவிடமாட்டார்கள் ..
Rate this:
Cancel
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-202120:27:22 IST Report Abuse
SexyGuy . வோட்டு போட்டவர்கள் மடயர்களா?. தொகுதியில் தேர்தலுக்கு அரசாங்கம் செலவு செய்த பணம் போல் ரெண்டு மடங்கு, மற்றும் இனி தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை, அந்த கட்சி அந்த தொகைதியில் நிற்க தடை என இது மூன்றையும் செயற்படுத்தலாம்.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
12-ஜூன்-202120:11:55 IST Report Abuse
தஞ்சை மன்னர் நிச்சயம் இது ஆவத வேலை இப்படி ராஜினாமா செய்யும் நபரை ஆயுள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் ஏன் நிற்கவேண்டும் , உடல் ஆரோக்கிய தகுதி இல்லதவர்கள் பதவி கிடைப்பதை தடுக்கப்படவேடனும்
Rate this:
skandh - Chennai,இந்தியா
13-ஜூன்-202113:30:49 IST Report Abuse
skandhC Ve ஷண்முகம்னா குலை நடுங்குதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X