அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டாக்டர்களுக்கு உயர்தர உணவு தந்தும் தினமும் ரூ.30 லட்சம் மிச்சம்!'

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சென்னை:'கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு, உயர்தர உணவு, தங்கும் விடுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'அப்படி இருந்தும், கடந்த ஆட்சியை விட தினமும், 30 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தி உள்ளோம்' என, மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளர். அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும்

சென்னை:'கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு, உயர்தர உணவு, தங்கும் விடுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'அப்படி இருந்தும், கடந்த ஆட்சியை விட தினமும், 30 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தி உள்ளோம்' என, மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளர்.

அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, இருப்பிட வசதியும், மூன்று வேளை தரமான உணவும் சரியாக வழங்கப்படவில்லை என, முதல்வருக்கும், எனக்கும் புகார் வந்தது.


விலை நிர்ணயம்

அ.தி.மு.க., ஆட்சியில், ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, 550 ரூபாய் முதல், 600 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, சாதாரண உணவகங்களில் இருந்து உணவு பெறப்பட்டுள்ளது.கடந்த, மே, 21 முதல், பிரபல ஓட்டல்களில் இருந்து, புரதச்சத்து மிகுந்த சைவ, அசைவ உணவுகள், சென்னையில், 450 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

மற்ற மாவட்டங்களில், அங்குள்ள நிலவரத்திற்கேற்ப, 350 ரூபாய் முதல் 375 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆட்சியில்,சாதாரண விடுதியில்தங்க, 900 ரூபாய் வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது, உயர்தரதங்கும் விடுதிகளில், ஒரு நாளைக்கு, 900 ரூபாயில் இருந்து, 750 ரூபாய் குறைக்கப்பட்ட, வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கொரோனா பேரிடரில் பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் விடுதி ஆகியவற்றின் தரம் உயர் தரத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.அதேவேளையில், தினசரி செலவில் இருந்து எவ்வித இடையூறும், கையூட்டும் இல்லாமல், பயனாளர்கள் முழுமையான பயனை அடைகின்றனர். இதனால், மாநிலம் முழுதும், ஒரு நாள் செலவில், 30 லட்சம் ரூபாய் மிச்சம் செய்யப்பட்டுள்ளது.


நடவடிக்கை

பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். கொரோனா முடிவுக்கு வரும் நிலையில், இதுகுறித்து துறை ரீதியாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X